செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் 6 திரைப்படங்கள்!!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! 

0
236

செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் 6 திரைப்படங்கள்!!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

இந்த மாதம் அதாவது செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட 5 தமிழ் திரைப்படங்களும் தெலுங்கு மொழியில் எடுத்து தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு 1 திரைப்படம் என்று ஆறு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. ஒரே நாளில் 6 திரைப்படங்கள் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

செப்டம்பர் 28ம் தேதி இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகவுள்ளது. சந்திரமுகி2 திரைப்படத்தில் நடிகர்கள் ராகவா தாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார், லக்சுமி மேனன், ஸ்ருஷ்டி தாங்கே ஆகியோர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் எம்.எம் கீராவாணி அவர்கள் இசை அமைத்துள்ளார்.

செப்டம்பர் 15ம் தேதி சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 28ம் தேதியில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளது. மேலும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாலும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றது.

செப்டம்பர் 28ம் தேதி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. இறைவன் திரைப்படத்தை இயக்குநர் அஹமது இயக்கியுள்ளார். நடிகை நயன்தாரா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இறைவன் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அடுத்து நடிகர் ஹரிஸ் கல்யான் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் திரைப்படமும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. பார்க்கிங் திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கியுள்ளார். பார்க்கிங் திரைப்படத்தில் இந்துஜா, பிராத்தனா நாதன், இளவரசு ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் திரைப்படமும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. ரத்தம் திரைப்படத்தில் மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அடுத்து நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா என்ற திரைப்படமும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாஙவுள்ளது. சித்தா திரைப்படத்தை இயக்குநர் எஸ்.யூ அருண் குமார் அவர்கள் இயக்கியுள்ளார். பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டிரெய்லர் எல்லாம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் இயக்குநர் போயப்பட்டி ஸ்ரினு இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான ஸ்கந்தா திரைப்படமும் செப்டம்பர் 28ம் தேதி தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. ஸ்ரீலீலா, சஜி மஞ்சரேக்கர், பிரின்ஸ் சிசில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleசீர் செய்யப்படுமா அரசுப் பள்ளி கட்டிடங்கள்? நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?
Next articleயூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை.. விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 11! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!