சீர் செய்யப்படுமா அரசுப் பள்ளி கட்டிடங்கள்? நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?

0
45
#image_title

சீர் செய்யப்படுமா அரசுப் பள்ளி கட்டிடங்கள்? நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?

தமிழகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதாக அரசுப் பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கூட பள்ளி கட்டிடங்கள் பல ஆண்டுகளாக இப்படித்தான் சேதமடைந்து உள்ளதாகவும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் புகார் கூறுகின்றனர்.

தமிழக முழுவதும் அரசு ஆரம்பப்பள்ளிகள், அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் என பல்வேறு நிலைகளில் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. குறிப்பாக அரசு பெண்கள் பள்ளிகளில் உரிய கழிப்பறை வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டும் உள்ளது. சில அரசுப் பள்ளி கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இயங்கி விருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உயிருக்கும் ஆபத்தையே ஏற்படும் சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதெல்லாம் குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடத்திலும் சம்பந்தப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரியிடமும் கோரிக்கை மனு அளித்தும், புகார் கூறியும் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று ஊர்மக்கள் குறை கூறி வருகின்றனர். குறிப்பாக நகர்புறத்தை விட, கிராமப்புறத்தில் தான் அரசுப் பள்ளிகள் கேட்பாரற்ற நிலையில் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் கிராமப்புறம், நகர்ப்புறம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் செயல்படும் அரசுப் பள்ளி கட்டிடங்களின் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை உடனே சரி செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K