உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் பொது மக்கள் புத்தாடை மற்றும் பட்டாசு வெடித்தும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்தினம் முதல் பட்டாசு வெடித்து மற்றும் தீபாவளி அன்று எண்ணை தேய்த்து குளித்து பட்டாசுகள் வெடிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் சீனா பட்டாசுகளை தவிர்த்து இந்த வருடம் நம் தமிழனால் உற்பத்தி செய்யப்பட சிவகாசி பட்டாசுகளுக்கு அதிகம் விற்பனை செய்யப்பட்டது. இது உலகம் முழுவதும் இந்த வருடம் விற்பனை அதிகம் செய்யப்பட்டது சிவகாசி பட்டக்சுகள். சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகளவில் பட்டாசுகள் விற்பனையாகி உள்ளது. தற்போது வரை 90 சதவீத பட்டாசுகள் முற்றிலுமாக விற்பனையாகி விட்டன என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.