6 முறை சாம்பியன் ! இந்த முறை முதலாவதாக வீடு திரும்பிய ஆஸ்திரேலியா !!

Photo of author

By Rupa

 

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அரையிறுதியில் நுழைந்த அணிகள் குரூப் A-யில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து , குரூப் B-யில்  தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நான்கு அணிகள் முன்னேறின.

 இறுதி போட்டிக்கு செல்ல அரையிறுதி போட்டியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போட்டி துபாய் சர்வதேச அரங்கில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி இதுவரை நடந்த 8 உலக கோப்பை போட்டிகளில் 6 முறை கோப்பையை வென்றுள்ளது.    தென்னாப்பிரிக்கா அணி இதுவரை ஒரு கோப்பையை கூட வென்றதில்லை.

 இந்த நிலையில் முதல் போட்டி நடைபெற்றது. இதில்  டாஸ்  வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் சூசகமா பந்து வீச்சை தேர்வு செய்தது.  பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி எதிரணியின் பந்துவீச்சை கணிக்க முடியாமல் திணறிய நிலையில் 20 ஓவர் முடிவுற்ற நிலையில் அணியின் எண்ணிக்கை 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

 இதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் 42  ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  இதனை தொடர்ந்து களமிறங்கிய அன்னே போஷ் சிறப்பாக  ஆட்டமிழக்காமல் கடைசி வரை விளையாடி 74 ரன்கள் அடித்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால்தொடர்ந்து 15 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா அணி  இறுதி போட்டிக்கு செல்லும் அறையிருதியிளிருந்து முதல் அணியாக வெளியேறியது.

இதை தொடர்ந்து அரையிறுதி இரண்டாவது போட்டி நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு  இடையே நடக்க உள்ளது.  இதில் தென்னாப்பிரிக்காவுடன்  எந்த அணி மோத உள்ளது? எந்த அணி கோப்பையை வெல்லும் ????