6 வயது சிறுமியின் கையைக் கட்டி இழுத்துச் செல்லும் போலிஸ் ! சமூகவலைதளங்களில் கண்டனம் !
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளியில் முரண்டு பிடித்த 6 வயது சிறுமி ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார் ஜெர்சி லாரான்ஸ் என்ற 6 வயது மாணவி. இவர் பள்ளியில் அடிக்கடி ஆசிரியர்களிடம் தவறாக நடந்து கொள்வதும் அதற்காக அவரது பெற்றோர் வந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பதும் வாடிக்கையாக நடந்துள்ளது.
இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர் இவரிடம் ஏதோ கேள்வி கேட்க கோபமான சிறுமி அவர் முகத்தில் புத்தகங்களை தூக்கி எரிந்து தாக்கியுள்ளார். இதனால் அந்த ஆசிரியர் போலிஸுக்கு தகவல் சொல்ல அங்கு வந்த போலிஸார் சிறுமியின் கையை பின் புறம் கட்டி அவரை அழைத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. அப்போது அந்த சிறுமி ‘ என்னை யாராவது காப்பாற்றுங்க:. எனக்கு போலிஸ் வாகனத்தில் செல்ல விருப்பமில்லை ‘ எனக் கூறி அழுகிறார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. சம்மந்தப்பட்ட வீடியோ இப்போது வெளியானதை அடுத்து சமூக வலைதளங்கலில் போலிஸாருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன.