அவசரமாக ரயில்வே டிக்கெட் எடுப்பவர்கள் தட்கல் மூலம் டிக்கெட்டை எடுத்து வரும் நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்து போய் விடுவதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டதில் சட்டவிரோதமான சாப்ட்வேர்களை பயன்படுத்தி ஏஜென்டுகள் ஒருசிலர் தட்கல் டிக்கெட்டை எடுப்பதால் தான் இந்த பற்றாக்குறை ஏற்படுவதாக ரயில்வே துறையினர் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்த ரயில்வே துறை கட்டுப்பாட்டு ஆணையம், சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட்டுகளை பதிவு செய்து 60 ஏஜெண்டுக்களை கைது செய்தனர். இதனை அடுத்து இனிமேல் ரயில் பயணிகளுக்கு எளிதாக தட்கல் டிக்கெட் கிடைக்கும் என்று ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படிப்பட்ட மென்பொருள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் 60 ஏஜென்ட்களிடம் இருந்து நடைபெறும் விசாரணையில் மேலும் ஒரு சிலர் இதே போன்று முறைகேடாக டிக்கெட் எடுக்கின்றார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் ஏஜெண்டுக்கள் ரூ. 50 கோடி முதல் 100 கோடி வரை தட்கல் டிக்கெட் எடுத்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.