ரத்து செய்யப்பட்ட 60 விமானங்கள்!! இந்தியா – அமெரிக்கா இடையே விமான போக்குவரத்திற்கு தடை!!

0
428

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே போக்குவரத்து மேற்கொள்ளும் 60 விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா நிறுவனம்.

கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வர உள்ள நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அதிகப்படியான பயணிகள் வந்து செல்லும் காலம் என்பதால் இது பயணிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

திடீரென 60 விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்வதற்கான காரணமாக கூறப்படுவது :-

ஏர் இந்தியா நிறுவனம் பராமரிப்பு காரணமாக 60 விமானங்களை ரத்து செய்ததாக தெரிவித்திருக்கிறது. மேலும் விமானங்களின் உபரி பாகங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதனால் நவம்பர் மாதம் மத்தியில் மற்றும் டிசம்பர் மாதம் முழுவதும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான விமான போக்குவரத்து தடைபட இருக்கிறது என்றும், குறிப்பாக டெல்லியில் இருந்து சிகாகோ, டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ ,டெல்லியில் இருந்து வாஷிங்டன் ,மும்பையில் இருந்து நியூயார்க் ஆகிய வழித்தடங்களில் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த தகவல்களை முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவித்து விட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களின் விவரங்கள் பின்வருமாறு :-

டெல்லி-சிகாகோ (AI126): 15, 20, 22, 29 நவம்பர்; 4, 6, 11 டிசம்பர்

சிகாகோ-டெல்லி (AI127): 15, 20, 22, 29 நவம்பர்; 4, 6, 11 டிசம்பர்

டெல்லி- நியூயார்க் (AI105/AI106): 5 டிசம்பர்

டெல்லி- சான் பிரான்சிஸ்கோ (AI173/AI174): 15, 18, 26 நவம்பர்; 2, 9, 13 டிசம்பர்

டெல்லி- வாஷிங்டன் (AI103/AI104) 16 நவம்பர் – 31 டிசம்பர்

மும்பை – நியூயார்க் (AI119/AI116): 19 நவம்பர், 9 டிசம்பர்

மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் எந்தவிதமான சேவை கட்டணமும் கட்ட தேவை இல்லை என்றும், அவர்கள் வேறு தேதிகளில் தங்களுடைய டிக்கெட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், ஒருவேளை அதே தேதியில் செல்ல வேண்டும் என்றாலும் வேறொரு ஏர்லைன்ஸில் புக் செய்து கொள்ளலாம் என்றும் அவர்களுடைய பணம் முழுமையாக திருப்பி தரப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Previous articleவீட்டுக்கு வருமான வரி நோட்டிஸ் வராமல் இருக்க இதை மறக்காமல் செய்யுங்கள்!!
Next articleதமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!!நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்!!