மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்! போக்சோ சட்டம் பாய்ந்தது!

0
179

தர்மபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூனையன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன், இவர் அதே பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் நான் வழக்கம் போல ஆடு மேய்க்கும் பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அதே பகுதியைச் சார்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் ஒருவர் தன்னுடைய தந்தையுடன் ஆடுகளை மேய்ப்பதற்காக வருகை தந்திருக்கிறார்.

அந்த சமயத்தில் ஆடு மேய்க்க அழைத்துச் செல்வதாக தெரிவித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். அந்த பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து இருக்கிறார்கள்.அதன் காரணமாக மனோகரன் தப்பி ஓடியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட அவருடைய தந்தை இது தொடர்பாக பாலக்கோடு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும் அனைவரும் கைது செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Previous articleமுன்கள பணியாளரையும் விட்டு வைக்கவில்லை! என்ன ஒரு அவலம்!
Next articleதோல் வியாதி வந்த கணவரை தொட மறுத்த மனைவி! இறுதியில் ஏற்பட்ட விபரீதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here