அயோத்தி ராமர் கோயிலுக்கு தூத்துக்குடியிலிருந்து செல்லும் 600 கிலோ எடையுள்ள மணி !!

0
163

அயோத்தி ராமர் கோயிலுக்கு தூத்துக்குடியிலிருந்து செல்லும் 600 கிலோ எடையுள்ள மணி !!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி, அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடத்தப்பட்டு, அடிக்கல் நாட்டி கோவில் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

கோவில் கட்டுமானப் பணிகளுக்கும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட உள்ள நிலையில், கோவிலின் அமைக்கப்படும் பிரதானமான மணி உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள 2 டன் எடையுள்ள மணியின் ஒலியனது, 15 கிலோமீட்டர் தொலைவிலும் கேட்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் நாடார் என்பவர் பாத்திரக்கடையில் இருந்து 600 கிலோ எடையுள்ள மணியை அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைய 3 ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ,வரும் 2024 ஆம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிந்து பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கோயில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleகன்னட படத்தை ரீமேக் செய்ய உள்ள தமிழ் இயக்குனர்! ஹீரோயினாக பிக்பாஸ் பிரபலம்!
Next articleபிரபல நடிகர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்! நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் கைது செய்யப்படுவாரா?