தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது மாதம் 6000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி இருக்கின்றது. அது என்ன திட்டம் யாருக்கு அது கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
திமுக தலைமையிலான தமிழக அரசு தற்பொழுது தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகின்றது. இந்த ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழக அரசு பெண்களுக்காக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலமாக மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகின்றது. இந்த தொகை ஒவ்வொரு மாதம் 10ம் தேதிக்கு மேல் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.
அதே போல அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமாக மாதம் 1000 ரூபாயும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக மாதம் 1000 ரூபாயும் அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.
அதே போல சுய தொழில் தொடங்க 50000 மானியம், கால்நடை வாங்குவதற்கு 1.20 லட்சம் ரூபாய் என்று பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தற்பொழுது மாதம் 6000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி இருக்கின்றது.
தமிழக அரசு எப்படி பொது மக்களுக்கு நலத்திட்டங்களை செய்து வருகின்றதோ அதே போல விளையாட்டு வீரர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று நலிவடைந்த நிலையில் உள்ள தலைசிறந்த முன்னாள் வீரர்களுக்கு மாதம் 6000 ரூபாய் வழங்கும் திட்டம் ஒன்று உள்ளது.
இந்த திட்டத்தில் இணைந்து தமிழக அரசு மாதம் வழங்கும் 6000 ரூபாயை பெறுவதற்கு www.sdat.tn.gov என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்து மாதம் 6000 ரூபாய் உதவித் தொகை பெறலாம். இதற்கு சில தகுதிகளையும் தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு வழங்கும் 6000 ரூபாயை பெறுவதற்கு விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் அல்லது தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களுக்குள் பெற்றிருக்க வேண்டும். மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகள், அகில இந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளிலும் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
தமிழக அரசு வழங்கும் 6000 ரூபாய் உதவித் தொகையை பெற விரும்பும் நபர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் 58 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும். அதே போல விண்ணப்பிக்கும் நபரின் மாத வருமானம் 6000 அல்லது 6000க்கு கீழ் இருக்க வேண்டும். 6000க்கு மேல் சம்பளம் வாங்கும் நபர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. ஆன்லைன் மூலமாக செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.