ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல்

Photo of author

By CineDesk

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் வில்லியம்ஸ் பர்க் என்ற பகுதியில் உள்ள பிசியான தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சமீபத்தில் அடுத்தடுத்து 50க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்

இந்த பகுதியில் கடுமையான பனி மூட்டம் இருந்ததாகவும் காலை 8 மணிவரை பனிமூட்டம் இருந்ததால் பாதை சரியாக தெரியவில்லை என்றும் இதனால் அந்த பகுதியில் வந்த கார்கள் பாதை தெரியாததால் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களில் இருந்த காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் மொத்தம் 69 வாகனங்கள் மோதி கொண்டதாகவும் 50க்கும் மேற்பட்ட பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 11 பேர் பலத்த காயத்துடன் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிஸியான சாலை ஒன்றில் அடுத்தடுத்து 69 கார்கள் மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.