2000 ரூபாய் நோட்டுக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!!! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!!

Photo of author

By Sakthi

2000 ரூபாய் நோட்டுக்கு இன்னும் 7 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!!! இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்றே(செப்டம்பர்30) கடைசி நாள் என்று இருந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கூடுதலாக 7 நாட்களை நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செலாவணி மேலாண்மை நடவடிக்கையின் கீழ் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ம் தேதி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வேறு மதிப்புடைய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்குகளில் வைப்பு வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரை அதாவது இன்று வரை மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள், மதுபானக் கடைகள் ஆகிய இடங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இன்றுடன்(செப்டம்பர்30) 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலையில் மேலும் 7 நாட்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 7ம் தேதி வரை மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இதுவரை செப்டம்பர் 1ம் தேதி வரை 93 சதவீதம் பெறப்பட்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது செப்டம்பர் 30ம் தேதியின் நிலவரப்படி 96 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.