குட் நியூஸ்! தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி… முழு விவரம் உள்ளே!

0
118

நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில் தமிழகத்திற்குள் 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பின்னர், ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் சிறப்பு ரயில் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட வருகிறன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எழும்புர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 39 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்கள் இயக்க அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில் தமிழகத்திற்குள் 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்கள்:

  • சந்திரகாச்சி – சென்னை சென்ட்ரல் (ரயில் எண் 22807, 22808) வாரம் இருமுறை இயக்கப்படும்
  • சென்னை சென்ட்ரல் – மதுரை (ரயில் எண் 20601, 20602) குளிர்சாதன சிறப்பு ரயில்கள் வாரம் இருமுறை இயக்கப்படும்
  • சென்னை சென்ட்ரல் – டெல்லி நிஜாமுதின் (ரயில் எண் 12269,12270) குளிர்சாதன ரயில் வாரம் இருமுறை இயக்கப்படும்
  • பெங்களூர் – சென்னை சென்ட்ரல் சதாப்தி (ரயில் எண் 12028, 12029) செவ்வாய் கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படும்
  • சென்னை சென்ட்ரல் – கோவை சதாப்தி (ரயில் எண் 12243, 12244) செவ்வாய் கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படும்
  • சென்னை சென்ட்ரல் – பெங்களூர் இரட்டை அடுக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் 22625, 22626) தினசரி இயக்கப்படும்
  • ஹவுரா – யஸ்வந்த்பூர் குளிர்சாதன ரயில் (ரயில் எண் 22863, 23864) வாராந்திர சிறப்பு ரயில்களாக இயக்கப்படும்.

மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணிகள் அனைவரும் ரயிலில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleகடவுள் விஷயத்தில் இதுவரை இதை செய்து கொண்டிருந்தால் தயவு செய்து இனி செய்யாதீர்கள்!
Next article25000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? மத்திய அரசு வேலை! உடனே apply பண்ணுங்க! 6 நாள் தான் இருக்கு!