காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Photo of author

By Parthipan K

காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Parthipan K

காஷ்மீர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தை நேரத்தில் 7 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் கிலூரா பகுதியில் பாதுகாப்புப் படையுடன் நடந்த மோதலில் நேற்று அடையாளம் தெரியாத 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேபோல் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்று அதிகாலை முதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை புல்வாமா மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மூன்று பயங்கரவாதிகளை காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை வட்டாரங்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த தாக்குதலில் நடைபெற்றதாகவும் ,மேலும் தேடுதல் பணியில் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.