7 சுற்றுலாத் தலங்கள் விரிவுபடுத்தப்பட்டது!! அதனை முதல்வர் இன்று திறந்துதுவைத்தர்!!

Photo of author

By Vinoth

சுற்றுலாத் துறையின் 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி மாவட்டம்:  ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழுமையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, கழிப்பறைகள், நுழைவுச் சீட்டு வழங்குமிடம், உணவகம், படகு தளம், பார்வை மேடை, மசாஜ் செய்யும் இடம், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், ஆழ்துளை கிணறு போன்ற போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம்: வத்தல்மலைப் பகுதியில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் நில சீரமைப்பு, வாகன நிறுத்துமிடம், நுழைவு வாயில் வளைவு, உணவகம், வரவேற்பறை, ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம்: கொல்லி மலையை முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்திடும் வகையில் ரூ.2 கோடியே 22 லச்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, வாகன நிறுத்துமிடம், நடைபாதை, கழிப்பறைகள், சாகச மற்றும் சுற்றுலா வசதிகள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள் முடிக்கக்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம்: ஆண்டிபாளையம் ஏரியில் 1 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் நிலசீரமைப்பு, சாலை மற்றும் நடைபாதை, மின்சாரப் பணிகள், கண்காணிப்பு கேமிராக்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம்:  முட்டம் கடற்கரையில் 2 கோடியே 84 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் பார்வையாளர்கள் மாடம், குழந்தைகள் விளையாடுமிடம், சென்ட்ரல் பிளாசா, நுழைவுச்சீட்டு வழங்குமிடம், தகவல் பலகை, சிற்பங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம்: அந்தியூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட ரூ.50 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நிலச்சீரமைப்பு, படகுதளம், ஆழ்துளை கிணறு, மின்சாரப் பணிகள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம்:  மன்னார்குடி, ஹரித்ராநதி கோயில் குளத்தை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நிலச்சீரமைப்பு, படகுதளம், ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள் முடித்து, மொத்தம் 27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை முதல்வர் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்தது வைத்தார்.