Breaking News

சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்! நீச்சல் குளத்தை மூடி சென்னை மாநகராட்சி உத்தரவு 

சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்! நீச்சல் குளத்தை மூடி சென்னை மாநகராட்சி உத்தரவு

ஏழு வயது சிறுவன் தேஜா குப்தா நேற்று முன்தினம் மாலை மை லேடிஸ் பூங்கா நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர்கள் இருவர் உயிர் பாதுகாப்பு பிரிவு ஊழியர் என மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நீச்சல் குளத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நீச்சல் குளத்தை மூடினர்.

நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது என அறிவிப்பு பலகை வைத்து பூட்டு போட்டு மாநகராட்சி மண்டலம் 5 அதிகாரிகள் சென்றுள்ளனர்.