சென்னை போரூர் ஆர்.ஏ. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புது நல்லூர் கிராமத்தில் இருக்கின்றனர் ரப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் அதே நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் செந்தூர்பாண்டி.
இவர்கள் இருவருக்கும் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு தண்ணீர் விடுவது தொடர்பாக தகராறு உண்டாகியிருக்கிறது.
இதில் செந்தூர்பாண்டி சுராஜ் அவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்திருக்கிறார். இது குறித்து சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தூர்பாண்டியை கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கானது காஞ்சிபுரம் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில், அரசு வழக்கறிஞர் சத்தியமூர்த்தி ஆஜராகி வாதாடினார்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி இளங்கோவன் செந்தூர்பாண்டிக்கு 7 வருடகால சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.