ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்கு!! 3 வது நாள் ஆட்டம் நேற்று தொடக்கம்!!
3 வது நாள் நேற்று,
வெறும் 76 ரன்கள் சிறிய இலக்கு.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேஷ் மாநிலத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது,
முதலில் களம் இறங்கிய இந்தியா வெறும் 109 ரன்களில் அனைத்து விக்கெட்ளையும் இழந்தது.
பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 4 விக்கட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது.
உமேஷ் யாதவ், அஸ்வின் வந்து வீட்டில் ஆஸ்திரேலியா தடுமாறி விக்கெட்டுகளை இழந்தது, 76.3 ஓவர்களில் 197 ரன்னில் அடங்கியது.
இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட் எடுத்தார், அஸ்வின் 3 விக்கெட் , உமேஷ் யாதவ் 3 விக்கெட் எடுத்தார்.
88 ரன்கள் பின் தங்கி இருந்த இந்தியா இரண்டாவது இன்னிங்ஸிலும் சரியாக விளையாடவில்லை, ஆட்டம் முடிவில் 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்ளையும் இழந்தது இந்தியா.
ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் 8 விக்கெட்டுகளை எடுத்தார். நாதன் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் மேல் எடுப்பது இது 23 வது முறை.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு இந்தியா 76 ரன்கள் வெற்றி இலக்கை கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் ஒரு சிறிய இலக்காக கொண்டு மூன்றாவது நாள் நேற்று முதல் தொடங்கியது.