வருகிறது பெரும் புயல்! தப்புமா தமிழகம்!

0
238

தென்கிழக்கு அரபிக்கடலின் பகுதியில் உருவாகியிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற இடங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி இன்று புயலாக உருவாகி இருக்கிறது. அரபிக் கடலில் உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு டவ் தே என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று 18ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கோவா குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்த புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கனமழை முதல் மிக கனமழை வரை செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அரபிக்கடலில் ஒரு இடத்தில் இருக்கும் இந்த புயல் காரணமாக, நீலகிரி, தேனி, கோயமுத்தூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதோடு ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி சேலம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்ட வண்ணம் இருக்கிறார்கள். புயலை எதிர்கொள்வதற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருந்து வருகிறார்கள். மீனவர்கள் வருகின்ற 17 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Previous articleபாட்டி வீட்டிற்கு சென்ற பேரக்குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாப சாவு; காரணம் என்ன தெரியுமா?
Next articleபுதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!