புதுவையில் அதிமுகவிற்கு ஒரு நியமன எம்எல்ஏ பதவியா? பாஜக அதிரடி முடிவு!

0
52

சமீபத்தில் நடந்த தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10 இடங்களையும், கைப்பற்றி கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சென்ற ஆறாம் தேதி இரவு பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி இடம் கொடுத்து இருக்கின்றார். ஆனால் ரங்கசாமி நான் மட்டும் முதலில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறேன். அதன் பின்னர் அமைச்சர்கள் பதவியேற்கட்டும் என்று அந்த பட்டியலை தவிர்த்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில் ரங்கசாமிக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரங்கசாமி இன்றைய தினம் புதுச்சேரி திரும்ப இருக்கின்றார். அவர் தொடர்ச்சியாக பதினைந்து தினங்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக, அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வது தாமதமாகும் நிலை உண்டாகி இருக்கிறது.

இதன் காரணமாக, கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் மற்றும் சலசலப்பு உள்ளிட்டவை ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாகியிருக்கிறது. இந்த நிலையில், அதிமுகவின் அமைப்பாளரும் முன்னாள் சட்ட சபை உறுப்பினருமான அன்பழகன் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கூட்டணி கட்சிகளுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் கிடையாது என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

அன்பழகனின் இந்த திடீர் அறிக்கை தொடர்பாக விசாரணை செய்து சமயத்தில், அதிமுக ஐந்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது. அவர்கள் புதுவையில் அரசியல் செய்தே ஆக வேண்டும் இது தொடர்பாக அதிமுகவினர் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இடம் அன்பழகன் கோரிக்கை வைத்திருக்கின்றார். ஆகவே எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிடம் பேசி அதிமுகவிற்கு ஒரு நியமன சட்டசபை உறுப்பினர் பதவியை உறுதி செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இதன் காரணமாக அண்மையில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மூவருக்கு நியமன சட்டசபை உறுப்பினர் பதவியை கொடுத்தது அதில் ஒருவரை இராஜினாமா செய்ய தெரிவித்தது பாரதிய ஜனதா கட்சியின் தலைமை. அவருக்கு பதிலாக அதிமுகவின் அன்பழகன் அவர்களை சட்டசபை உறுப்பினராக மத்திய உள்துறை பரிந்துரை செய்ய இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.