குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எட்டு மாத கைக்குழந்தை!

Photo of author

By CineDesk

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எட்டு மாத கைக்குழந்தை!

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே 8 மாத பெண் குழந்தை குப்பையில் கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று விடியற்காலை 4 மணி அளவில் குப்பைத்தொட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இதை அங்கிருந்த துப்புரவு பணியாளர்கள் கவனித்து உள்ளனர்.  உடனே அங்கிருந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து எட்டு மாதங்களே ஆன பெண் கைக்குழந்தை குப்பையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் குழந்தையை மீட்ட ஜோலார்பேட்டை போலீசார்  குழந்தையை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்குப்பின் ஆசிரியர் நகரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர்.  அங்கு குழந்தைக்கு தேவையான அனைத்து வகையான சோதனைகளும் செய்யப்பட்டது.

குழந்தையை குறித்த விபரம் கண்டறிந்த பிறகு இரண்டு மூன்று மாதங்கள் கழித்து குழந்தையின் உறவினர் யாரும் வரவில்லை எனில் குழந்தையை தொடர்ந்து காப்பகத்திலேயே  பராமரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.