குட்டி ஐன்ஸ்டீன் சமூக வலைத்தளத்தை திரும்பி பார்க்க செய்யும் 8 மாதக் குழந்தை!!..

0
138
8-month-old baby Einstein looks back on social media!!..
8-month-old baby Einstein looks back on social media!!..

குட்டி ஐன்ஸ்டீன் சமூக வலைத்தளத்தை திரும்பி பார்க்க செய்யும் 8 மாதக் குழந்தை!!..

ஐன்ஸ்டீன் என்றாலே அவருக்கு அடங்காத அவரது  தலைமுடி தான் நிச்சயம் நமது நினைவுக்கு வரும். மேலும் ஐன்ஸ்டீனை போலவே தலைமுடியைக் கொண்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் குட்டிக் குழந்தை ஒன்று பிரபலமடைந்து வருகிறது.

இதனை பார்க்க அப்படியே ஐன்ஸ்டீன் தோற்றம் கொண்டது அந்த தலைமுடி.  இங்கிலாந்தில் கிரேட் பிளேக்கன்ஹாமில் உள்ள பதனெட்டு மாதமே ஆனா குழந்தை  ஒன்று லைலா டேவிஸ் Uncombable Hair Syndrome எனப்படும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு அதிகம் இருப்பவர்களுக்கு  தலைமுடியானது வறண்டு குச்சிபோல நீண்டு இருக்கும். இதை  நாம் வாரி படிய வைக்கவே முடியாது. எவ்வளவு தான் முயற்ச்சித்தாலும் அடங்காத முடி தான் இவை .இந்த உலகில் உள்ள 100ல் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுவார்.

இதனை குணப்படுத்த சிகிச்சைகள் இல்லை என்றாலும் பிள்ளைகள் வளர்ந்து பருவமடையும்போது ஓரளவுக்கு மாறலாம் அல்லது முழுமையாக சரியாகலாம்.இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாது.குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்பது மருத்துவரின் கருத்தாகும்.