ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

Photo of author

By Savitha

ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

Savitha

ரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

நடிகர் சூரியா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் 80 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா தற்போது அவருடைய 42வது படமான கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் பிரபாஸ் இந்த திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுக்கிறது.

இதற்கு மத்தியில் நடிகர் சூரியா நடித்து வரும் கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமம் 80 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி நிறுவனம் தான் கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை 80 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

நடிகர் சூரியா இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் கங்குவா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருவதால் தான் கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் 80 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.