பிரபல நடிகையிடம் 80 லட்சம் மோசடி!! மேலாளரின் ஏமாற்று வேலை அம்பலம்!!

0
117
80 lakh scam on famous actress!! Manager's cheating exposed!!
80 lakh scam on famous actress!! Manager's cheating exposed!!

பிரபல நடிகையிடம் 80 லட்சம் மோசடி!! மேலாளரின் ஏமாற்று வேலை அம்பலம்!!

ரஷ்மிகா மந்தனா, இந்தியத் திரைப்பட பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இதனையடுத்து சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் திரைத்துறை பயணத்தை ஆரம்பித்தார்.

இவர் தற்போது இணையதளங்களில் அதிகம் தேடப்படும் நடிகை என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது தளபதி விஜய்யுடன்  இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

மேலும் இவர்  நம்பர் 1 ஹீரோயினாக தெலுங்கு திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் 100 கோடிக்கு மேல் வசூல் ஆகிறது. இதன் காரணமாக இவரின் சம்பளம் உயர்ந்து வருகிறது. மேலும் இவருக்கு அதிக அளவில்  ரசிகர் கூட்டமும்  உள்ளது.

இந்நிலையில் ரஷ்மிகாவின் மேலாளர் அவரிடம்  இருந்து 80 லட்சம் மோசடி செய்ததாக தகவல் வெளிவந்திருந்தது . மேலும் அவரின் மேலாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும்  கூறப்படுகிறது.

ஆனால் இதுபற்றி ரஷ்மிகா அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.  தற்போது இவர் அனிமல் என்ற படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஜோடியாக ரன்பீர் கபூர் ஹீரோவாகவும்  நடித்து வருகிறார்.

author avatar
Jeevitha