29 வயது பெண்ணை காதலித்து கரம்பிடித்த 80 வயது முதியவர்!!

Photo of author

By Pavithra

29 வயது பெண்ணை காதலித்து கரம்பிடித்த 80 வயது முதியவர்!!

80 வயது முதியவர் ஒருவர் 29 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்கா நாட்டின்
கேப்டவுன் நகரைச் சேர்ந்த டெர்சல் ராஸ்மஸ் என்ற 29 வயதான பெண் சட்டக் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டே உள்ளூர் பத்திரிக்கை ஆபீஸில் வேலை செய்து வருகின்றார்.

இந்தப் பெண் கடந்த 2016ஆம் ஆண்டு தனது பத்திரிக்கை ஆபீஸில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வில்சன் ராஸ்மஸ் என்ற 80 வயது முதியவரை சந்தித்துள்ளார்.

இதன்பிறகு இருவருக்குமிடையே காதல் மலரவே,தனது காதலைப் பற்றி டெர்சலின் தன் தாயிடம் கூறியுள்ளார்.இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பை அப்பெண்ணின் தாயார் தெரிவித்தார்.இதற்கு முக்கிய காரணம் டெர்சலின் தாயைவிட அந்த முதியவர் 24 வயது மூத்தவர் என்பதனால்.

ஆனால் எப்படியோ அந்த காதல் ஜோடி இருவீட்டார் சம்மதத்தை பெற்று,சமீபத்தில் டெர்சலும் வில்சனும் திருமணம் செய்து கொண்டனர்.வில்சனின் 56 வயதான மூத்த மகள் தான் இவர்களின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.