‘வலிமையில்’ தல அஜித்துக்கு 800 சிசி பைக்! வில்லனுக்கு 1300 சிசி பைக்! ஏன்?

Photo of author

By Parthipan K

‘வலிமையில்’ தல அஜித்துக்கு 800 சிசி பைக்! வில்லனுக்கு 1300 சிசி பைக்! ஏன்?
அஜித் இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறார் இப்பொழுது புதிதாக நடித்த படம் தான் வலிமை. அஜித்துக்கு எம்வி அகுஸ்ட்டா பைக் தான் அவருக்கு ஃபேவரட் என்பது அஜித் ரசிகர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அந்த ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரில் இருப்பது அகுஸ்ட்டா இல்லை! அதற்குப் பதிலாக கேடிஎம் டியூக் 390, பைக்கை  மாடிபை செய்தது போல இருக்கிறது, இன்னொரு ஆங்கிளில் (Husqvarna) பைக்கை போலவும் இருக்கிறது.

ஆனால் வலிமை படம் முழுவதும் அஜித்துக்கு வரப்போவது, எம்டி அங்குடா RR புரூட்டேல் 800 என்கிற பைக்கில் தான் நடிக்கப் போகிறார் என்கின்றார்கள். இதற்க்கேற்ப தல அஜித் வீலிங் செய்வது போல் ஏற்கனவே வந்த பைக் தான் எம்வி அகுஸ்ட்டா, இத்தாலி நாட்டை சேர்ந்த பைக் நிறுவனம் எம்வி அகுஸ்ட்டா உலகம் முழுவதும் பைக் மற்றும் கார் டிசைன் கட்டுமானத்துக்கு பெயர்ப் பெற்றவை இத்தாலி நிறுவனம்.

வெறித்தனமான நேக்கட் டிசைன்களைக் கொண்டிருக்கும் RR பைக்கில் 1000 சிசி மற்றும் 800 சிசி என 2 இன்ஜின் மாடல்கள் உள்ளன. 800 சிசி எனும் Rosso,RR,SCS என மூன்று வகையான மாடல்கள் உண்டு.ஆனால், வரைப்படத்தில் அஜித் தெறிக்க விட்டுயிருப்பது RR 800 பைக் தானாம். அஜித்க்கு பொதுவாகவே டுகாட்டி, பிஎம்டபிள்யூ போன்ற நேக்கட் பைக்குகள் அல்லது ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மீதுதான் விருப்பம் என்பது ரசிகர்களுக்கு தெரியும்.

ஆனால் இந்த வலிமை படத்தில் அகுஸ்ட்டாவைத் தல அஜித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.இந்த இன்லைன் 3, சிலிண்டர் 798, சிசி இன்ஜினில் இருப்பது 12, வாழ்வுகள் இதன் டார்க் 8.87kgm, பிக்கப் பில் சும்மா தெறிக் காட்டும் புரோபெல் இந்த 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்யில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் 20, கி.மீ வேகத்தில் 6 வது கியரில் போனாலும் சரி 100, கி.மீ வேகத்தில் 2 வது கியரில் போனாலும் சரி இஞ்சின் (knocking) இருக்காது. இதன் மொத்த டாப் ஸ்பீடு 24, கி.மீ இந்த பைக்கை கையாள்வதற்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் காரணம் ,என்னவென்றால்! இதன் எடை 175, கிலோ இதை உயரம் குறைவானவர்கள் ஓட்டுவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.

காரணம், இதன் சீட் உயரம் 830, மி.மீ வலிமை படத்தில் தல அஜித் குமாருக்கு அகுஸ்ட்டா தான் நண்பன் என்றால் அதுவே வில்லனுக்கும் ஒரு நண்பனாக வருகிறது. இன்னொரு சூப்பர் பைக் அது சுசுகி B-king RX100 எனும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா கும்பக்கொண்டா என்பவர்தான் வலிமையில் அஜித்துக்கும், அனுஷ்காவுக்கும் வில்லனாக சுசுகி B-king ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறார்.