ஜூலை 7 ஆம் தேதி முதல் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு அதிரடி அறிவிப்பு!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
தமிழ்நாடு அரசு பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு வசதியாக இருக்க வெளி ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. தீபவாளி , பொங்கல், ரம்ஜான் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு பொதுமக்களுக்கு வசதியாக ஏற்படுத்தி தருகிறது . அதனையடுத்து தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த தகவளின் படி ஜூலை 8 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஜூலை 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதனை தொடர்ந்து முகூர்த்த நாட்கள வருகிறது. இதனால் இவைகளை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்து வசதி செய்து தரப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல கூடுதால பேருந்துகள் இயங்கயுள்ளது. அதனையடுத்து பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பல்வேறு புதிய ஏற்பாடுகளை செய்யுள்ளது. மேலும் தினசரி இயக்கும் பேருந்துகளை விட தற்போது கூடுதலாக சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது.
சென்னையில் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், பிற மாவட்டங்களுக்கான கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
அதனையடுத்து விடுமுறை முடிந்து சென்னை, பெங்களூர் போன்ற இடங்களுக்கு வருவதற்கும் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பேருந்து பயணத்திற்கு முன்பதிவு தொடங்கியது. மேலும் இதுவரை 23,626 பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாது என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.