8000 ரூபாய் மதிப்பில் 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல்… மோட்டோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது…
8000 ரூபாய் விலையில் 8 ஜிபி ரேம் கொண்ட புதிய மொபைலை மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்த மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் தற்பொழுது புதிய மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே மோட்டோ இ13 என்ற மொபைலை 2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரோம், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரோம் என்ற இரண்டு வேரியண்டுகளில் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. தற்பொழுது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம் என்ற வேரியண்டில் புதிய ஸ்மார்ட்போனை மோட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையடுத்து குறைந்த விலையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம் என்ற வேரியண்டில் கிடைக்கும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
இந்த புதிய மோட்டோ இ13 ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்…
* 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்.டி+எல்.சி.டி ஸ்கிரீன்
* ஆக்டாகோர் யுனிசாக் டி606 புராஸசர்
* மாலி ஜி57, எம்.சி2, ஜி.பி.யு
* 8 ஜிபி ரேம், 128 ஜிபி ரோம், கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 13(கோ எடிஷன்)
* 13 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 5 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா
* 3.5 m.m ஆடியோ ஜாக்ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்
* டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட் இ, வைபை, பிளூடூத் 5
* 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி 10 வாட் சார்ஜிங் திறன், டைப் சி யு.எஸ்.பி
* மோட்டோ இ13 ஸ்மார்ட் போன் காஸ்மிக் பிளாக், அரோரா கிரீன், கிரீமி வைட் ஆகிய 3 நிறங்களில் கிடைக்கின்றது.
* 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை 8,999 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.