திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தையே சுற்றி வளைத்த அமலாக்கத்துறை : அடுத்து என்ன?

0
35

 

 

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தையே சுற்றி வளைத்த அமலாக்கத்துறை : அடுத்து என்ன?

 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் அசோக் குமார் அவர்களை அமலாக்கத்துறையினர் கொச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

 

 

கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும், அவரது சகோதரர் அசோக் குமார் அவர்களின் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

 

 

சோதனையின் போது திமுக நிர்வாகிகள் அமலாக்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து அவர்களின் தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

 

இதைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜி அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி அவர்கள் இப்போது மீண்டும் அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார். இதற்கிடையே தனக்கு

 

நெஞ்சு வலி என்று கூறிய செந்தில் பாலாஜி அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. சிறிது காலம் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்தார்.

 

 

மற்றொருபுறம் சகோதரர் அசோக் குமார் அவர்களின் தொடர்புடைய இடங்களை அதிகாரிகள் முடக்கினார். செந்தில் பாலாஜி அவர்களை மனைவி பெயர் புதிதாக கட்டப்பட்டுள்ளது வெட்டப்பட்டு வரும் புதிய பங்களா வீடும் முடக்கப்பட்டுள்ளது.

 

 

செந்தில் பாலாஜி அவர்கள் கைது செய்யப்பட்ட போது அவரது சகோதரர் அசோக்குமார் அவர்களும் தலைமறைவான தலைமறைவான அசோக் குமாரை அமலாக்கத் துறையின் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அசோக்குமார் கேரள மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விமானம் மூலம் அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

 

 

அசோக்குமார் வருவதாக தகவல் கிடைத்தவுடன் அமலாக்கத் துறையினர் அங்கு விரைந்தனர். அங்கிருந்து அசோக் குமாரை கைது செய்தனர். அசோக்குமார் இன்று நீதிமன்றத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது போல, அசோக்குமாரையும் அமலாக்கத்துறையினர் கொண்டு வந்து விசாரிப்பார்கள் என்று தெரிகிறது

 

 

author avatar
Parthipan K