போட்டோ ஷூட் நடத்திய 80’s ஹீரோ! மாஸ் காட்டும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்!

Photo of author

By Parthipan K

 

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக சிறந்த நடிகராக திகழ்பவர் நாசர்.கிட்டத்தட்ட மூன்று  தலைமுறையினர் நாசரின் நடிப்பினை கண்டுள்ளனர் என்றே கூறலாம்.அவர் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.

அவர் நடித்த தேவர்மகன்,பம்பாய் போன்ற படங்களில் அவர் வெளிப்படுத்திய திறமை அபாரமான வெற்றியை ஈட்டித் தந்தன.மற்றும் அவருடைய அபாரமான வெற்றிக்கு வெற்றி பாதைக்கு வழிவகுத்தது.இதற்காக அவருக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது .

ஊரடங்கு காலத்தில் பல நடிகர் நடிகைகள் பலவிதமான போட்டோஷூட்  நடத்தி வரும் இவ்வேளையில் நடிகர் நாசர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இவர் நடத்தியுள்ள போட்டோஷூட்டில் இவர் மாஸ் கெட்டப்பில் புகைப்படங்களை எடுத்துள்ளார் இது இணையத்தில் உள்ளவர்களின் மத்தியில் பேசுபொருள் ஆகிவிட்டது.வயதானாலும் ஸ்டைலும் அழகும் இன்னும் கொஞ்சம் கூட குறையல என்ற டயலாக் அதுக்கு ஏத்த மாதிரி இருக்கார் பலர் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

கடைசியில் ரஜினி சாரோட டயலாக் நாசர் சாருக்கு பொறந்திருச்சு!