8 வது ஊதியக்குழு! மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!
மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பற்றி செய்திகள் எப்போது வெளியாகும் என காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஏழாவது ஊதிய குழுவுக்கு பதில் எட்டாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சில தகவல்கள் பரவி வருகின்றது. இந்நிலையில் 7 வது ஊதிய குழுவுக்கு பதில் அரசு எட்டாவது ஊதிய குழுவின் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது.
மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மீண்டும் எட்டாவது ஊதிய குழு பற்றி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை ஊதியக்குழு விதிகள் மாற்றப்படுகின்றது. எட்டாவது ஊதிய குழு தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை.
இருப்பினும் மத்திய அரசு அதற்கான பணிகளை தொடங்கி 2024 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என அண்மையில் தகவல் வெளியானது. எட்டாவது ஊதிய குழு பற்றி அறிவிப்பை மத்திய அரசு மக்களவைக்கு முன்னதாகவே வெளியிடலாம் என சில அறிவிப்புகள் கூறுகின்றது.
2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பே இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி வெளியிட கூடும் எனவும் தேர்வு முடிவுகள் வெளியாகி புது ஆட்சி அமைந்த பிறகு இது குறித்து பேச்சு வார்த்தை தீவிரமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.