தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தி அரசாணை வெளியீடு!!

0
371
9% increase in allowances for Tamil Nadu government employees.
9% increase in allowances for Tamil Nadu government employees.

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தி அரசாணை வெளியீடு!!

தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

இந்த அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அகவிலைப்படி உயர்வால் மாநில அரசுக்கு 2846 கோடியே 14 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதைத் தவிர மாநில அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி என்பது ஏ.ஐ.சி.பி.ஐ என்ற குறியீடு மூலம் கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த புள்ளிகளின் உயர்வு மற்றும் சரிவை கொண்டு அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்து வந்த புள்ளிகள் தற்போது வேகமாக உயர தொடங்கியது. இதனை அடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் பெறுபவர்களின் அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஏ. ஐ.சி. பி. ஐ குறியீடு கடந்த ஜனவரியில் 132.8 என்ற அளவில் இருந்தது.

இதேபோன்று புதுச்சேரியில் சமீபத்தில் அகவிலைப்படி 46 இல் இருந்து 50 சதவீதமாக உயரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மத்திய அரசும் விரைவில் அகவிலை படி மற்றும் எச்.ஆர்.ஏ உயர்வும் இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு எக்ஸ், ஒய், இசட் என்ற மூன்று பிரிவுகளில் 27 18, 30 சதவீதமாக எச்.ஆர்.ஏ சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Previous articleஅமித்ஷா என்னிடம் சொன்னது இது தான் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை!!
Next articleஇனி ரீசார்ஜ் செய்வதற்கு மட்டுமல்ல!! மொபைல் எண்ணை பயன்படுத்தவும் தனி கட்டணம்- ட்ராய் அதிரடி திட்டம்!!