டீசலை சேகரிக்க குவிந்த மக்கள்:! திடீரென லாரி வெடித்து 9 பேர் பலி!!

0
272

டீசலை சேகரிக்க குவிந்த மக்கள்:! திடீரென லாரி வெடித்து 9 பேர் பலி!!

டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்ததில் 9 பேர் பலி 70-ற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

ஆப்பிரிக்காவில் லிபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யா நகரில் டீசலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென்று அந்த டேங்கர் லாரியானது ரோட்டில் கவிழ்ந்தது. பிறகு டேங்கர் லாரியில் இருந்த டீசல் அனைத்தும் வெளியே கொட்டியது.

ரோட்டில் டீசல் கொட்டுவதை கண்ட வாகன ஓட்டிகளும் பக்கத்தில் இருந்த பொதுமக்களும் டிசலை சேகரிக்க குவிந்தனர்.
அப்பொழுது திடீரென்று எதிர்பாராமல் கவிழ்ந்த டீசல் லாரியானது வெடித்து சிதறியது.இந்த தீ விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடலில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் சுமார் 70-ற்க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இது மட்டுமின்றி இந்த தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது.

Previous articleவெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டி! சூரியகுமார் யாதவ் அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி!
Next articleபிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here