சமீபத்தில் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக அனேக இடங்களில் வெற்றியை கைபற்றியது சொல்லப்போனால் கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றியை கைப்பற்றியது ஆளும் கட்சியான திமுக தான்.
கடந்த 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்ற இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 12ஆம் தேதி நடந்தது அதில் அனேக இடங்களில் திமுக வெற்றி பெற்றிருந்தது.
இந்த சூழ்நிலையில், வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதள பக்கத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுடைய கட்சிக்காரர்களை வாழ்த்த விரும்புகிறேன் எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கு நன்றி அருமையான தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தொண்ணூறு வயது மூதாட்டி 1568 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பெருமாத்தாள் என்ற அந்த மூதாட்டி பெற்ற வெற்றியை கிராம வெற்றியாக கருதி அந்த ஊர் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.
.
இந்த சூழ்நிலையில், இன்று காலை 9 மணி அளவில் சிவந்திபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவராக அந்த மூதாட்டி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஊர் மக்கள் உற்சாகத்துடன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மிக மூத்த ஊராட்சி மன்ற தலைவி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் அந்த மூதாட்டி.
அதேபோல தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக 20 வயது கல்லூரி மாணவி சாருகலா வரவேற்று இருக்கிறார் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்களுக்கு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.