நாட்டில் 9,062 பேருக்கு புதிதாக நோய் தொற்று பாதிப்பு!

0
277

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்றுப்பரவல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி மிகப் பெரிய உயிரிழப்புகளை சந்திக்க வைத்து வருகிறது.

அந்த விதத்தில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,062 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,062 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,42,86,256 என அதிகரித்திருக்கிறது.

இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,36,54,064 என்று இருந்து வருகிறது.

நோய் தொற்று பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 36 பேர் பலியானதன் காரணமாக, பலி எண்ணிக்கை 5,27,134 என அதிகரித்திருக்கிறது.

தற்போது இந்த நோய் தொற்று பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,05,058 என இருந்து வருகிறது. இதுவரையில், 208.57 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous articleமுதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை!
Next articleஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!..