ஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!..

0
96
Sri Lankan Navy personnel watching the sea in a helicopter..Rameswaram fishermen in shock!..
Sri Lankan Navy personnel watching the sea in a helicopter..Rameswaram fishermen in shock!..

ஹெலிகாப்டரில் வேவு பார்க்கும் இலங்கை கடற்படை வீரர்கள்..அதிர்ச்சியில் ராமேஸ்வரம் மீனவர்கள்!..

இலங்கை கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் சுற்றி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த மாதம்  ராமேஸ்வரத்திலிருந்து 600 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய-இலங்கை எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அன்று மாலை இலங்கை தலைமன்னாரில் இருந்து ஹெலிகாப்டரில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்துபணியில் சுற்றி வந்தனர்.இதனை கண்ட ராமேஸ்வர மீனவர்கள் பீதியடைந்தனர்.பின்னர் அடுத்த சில நிமிடத்தில் இரு ரோந்து கப்பலில் வந்த இலங்கை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.

இதனால் 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் கடலில் இழுத்து வந்த வலையை வெட்டி மூழ்கடித்து விட்டு வெறும் படகுகளுடன் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். மற்றவர்களுக்கு காரல் உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில் முதன்முறையாக பாக்ஜலசந்தி கடலில் இலங்கை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து சுற்றியது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் அளித்த தகவல்படி ரோந்து கப்பலில் வந்த வீரர்கள் எங்களை விரட்டினர்.

சூறாவளி மீன்பிடி தடையால் 12 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்றும் வருவாய் இன்றி நஷ்டம் ஏற்பட்டது என்றனர்.இந்த சம்பவம் மீனவர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.விரைவில் இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

author avatar
Parthipan K