NLC நிறுவனத்தில் 92 காலிப்பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

NLC நிறுவனத்தில் 92 காலிப்பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!

Divya

NLC நிறுவனத்தில் 92 காலிப்பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி SME Operator பதவிக்கு மொத்தம் 92 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும்,இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பதவி: SME Operator

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 92

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது அதிகபட்சம் 63க்குள் இருக்க
வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பித்தவர்கள் Short Listing,Practical Test அடைப்படியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:

UR / EWS / OBC(NLC) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.486 ரூபாய் மற்றும் எஸ்.சி,எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 236 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

SME Operator பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் பதவி குறித்த முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்க https://www.nlcindia.in/ என்ற இணையதளத்தை பார்வையிட வேண்டும்.

கடைசி தேதி: இன்று 04.09.2023 மாலை 05.00 PM வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.