சைலேந்திரபாபு உத்தரவு எதிரொலி! ஒரே மாதத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

Photo of author

By Sakthi

சென்ற டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு போதைபொருள் குற்றவாளிகளை கைது செய்தார்கள். அந்த விதத்தில் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் 9500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ரூ 30.9 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அதே போல கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 1272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1221 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கஞ்சா வியாபாரி மகாராஜ் அவரின் கூட்டாளிகள் லட்சுமி, சரண்குமார், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார்கள்.

குட்கா கடத்திய வழக்கில் 7708 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள் சுமார் 40 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று காவல் துறையின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.