தவறான செய்தியால் 96 பேர் பலி! மொசாம்பிக் நாட்டில் நேர்ந்த சோகம்!
மொசாம்பிக் நாட்டில் காலரா பரவுகின்றது என்று பரவிய தவறான செய்தியால் அதிலிருந்து தப்பிக்க படகில் ஏறிச் செல்லும் போது நிகழ்ந்த விபத்தில் பறிதாபமாக 96 பேர் உயிரிழந்துள்ளது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மொசாம்பிக் நாட்டில் எரிவாயு வளம் அதிகம் உள்ளது. இந்த நாட்டில் 3ல் இரண்டு பங்கு மக்கள் கடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.வறுமையில் இருந்து மீண்டு நல்வாழ்க்கை வாழ்வதற்கான நம்பிக்கையுடன் மொசாம்பிக் நாட்டில் வசித்து வரும் மக்களுக்கு எதிராக 2017ம் ஆண்டில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வருகின்றது.அவர்களுக்கு எதிராகவும் மொசாம்பிக் நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.
இதனால் அங்கு அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியாமல் இதுவரை 5000 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.10 லட்சம் பேர் சொந்த நாட்டை விட்டு தாக்குதல்களில் இருந்து தப்பிக்க வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர்.
இதையடுத்து மொசாம்பிக் நாட்டில் காலரா பரவுகின்றது என்ற தவறான செய்தி பரவியதை அடுத்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள 130 பேர் ஒரு படகில் ஏறி நம்புலா மாகாணத்தில் உள்ள ஒரு தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 130 பேரில் பலர் கடலில் மூழ்கினர்.
இந்நிலையில் தேடுதல் வேட்டையில் இறங்க மீட்பு படையினர் இதுவரை 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 96 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்துக்கு படகில் போதிய இடவசதி இல்லாததால் அதிக மக்கள் பயணித்தது தான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகில் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக மொசாம்பிக் நாடு இருக்கின்றது.இந்த மொசாம்பிக் நாட்டில் கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் இதுவரை 15000 காலரா பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றது.மேலும் 32 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.