தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் 960 கிமீ ஓட்டம்!! தேசியக் கொடியை ஏந்திய படி ஓட்டத்தை தொடங்கிய 40 வயது நபர்!!!

Photo of author

By Sakthi

தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் 960 கிமீ ஓட்டம்!! தேசியக் கொடியை ஏந்திய படி ஓட்டத்தை தொடங்கிய 40 வயது நபர்!!!

சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகிகள் செய்த தியாகத்தையும் அவர்களையும் போற்றும் வகையில் 40 வயது நிரம்பிய திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூத்துக்குடி முதல் சென்னை வரை ஓடத் தொடங்கியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரை சேர்ந்த 40 வயது நிரம்பிய சூரியசங்கர் என்பவர் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் தூத்துக்குடி முதல் சென்னை வரை 960 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதற்கு முடிவு எடுத்தார்.

இதையடுத்து சூரிய சங்கர் அவர்கள் கடந்த செப்டம்பர் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் மட்டகட்டையில் உள்ள வ.உ.சி சிலை அருகில் இருந்து 960 கிலோ மீட்டர் பயணத்தை நோக்கி ஓடத் தொடங்கினார். பின்னர் சூரிய சங்கர் அவர்கள் குறுக்கு சாலை வ.உ.சி இல்லம், வாஞ்சி மணியாச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, நெற்கட்டும் சேவல், நரிகுடி மருதுபாண்டியர் கோட்டை, புலித்தேவர் கோட்டை, எட்டையபுரம் பாரதியார் இல்லம், அருப்புக் கோட்டை, மதுரை காந்தி மியூசியம் ஆகிய இடங்களை ஓடிக் கடந்தார்.

பின்னர் இன்று(செப்டம்பர்11) காலை திருச்சி-மதுரை நெடுஞ்சாலை வழியாக மணப்பாறையை அடுத்த கோவில் பட்டியை வந்து சேந்தார். கையில் தேசியக் கொடியை ஏந்திய படியே ஓட்டத்தை தொடங்கிய சூரிய சங்கர் அவர்கள் செப்டம்பர் 16ம் தேதி சென்னை உழைப்பாளர் சிலை அருகே சென்று 960 கிலோ மீட்டர் பயணத்தை முடிக்கிறார்.