ஜெயிலர்.. தொடரும் பரிசு மழை!! அடுத்து 200 பேருக்கு கலாநிதிமாறன் வழங்கியது என்ன?

0
42
#image_title

ஜெயிலர்.. தொடரும் பரிசு மழை!! அடுத்து 200 பேருக்கு கலாநிதிமாறன் வழங்கியது என்ன?

தமிழில் டாக்டர்,பீஸ்ட் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 10 அன்று உலகம் முழுவதும் வெளியான படம் ‘ஜெயிலர்’.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவா நடித்த இப்படத்தில் மோகன்லால்,சிவராஜ்குமார்,ரம்யா கிருஷ்ணன்,வசந்த் ரவி,விநாயகன்,தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி படமாக கொண்டாடப்பட்ட இப்படம் இந்திய சினிமா துறையில் வசூல் சாதனை படைத்தது.படம் வெளியாகிய நாள் முதல் இன்று வரை சுமார் 600 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசு வழங்கி வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்னதாக ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான படத்தின் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு BMW X7 என்ற மிகவும் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார்.அதனை தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு ‘செக்’ ஒன்றை வழங்கியதோடு Porsche காரை பரிசாக கொடுத்தார்.

இதனை தொடர்ந்து படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் முக்கிய காரணம் என்பதால் அவருக்கு காசோலை மற்றும் Porsche காரை கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார்.ரஜினி,நெல்சன்,அனிருத் ஆகியோருக்கு வழங்கிய சொகுசு கார்களின் விலை இந்திய மதிப்பின்படி சுமார் 1.40 கோடிக்கும் மேல் இருக்குமென்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது கலாநிதி மாறன் அவர்கள் ஜெயிலர் படத்தில் பணி புரிந்த 200 பேருக்கு 2 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கி இருக்கிறார்.ஒரு புறம் ஜெயிலர் என்றும் மறுபுறம் சன் பிக்சர்ஸ் என்றும் பொறிக்கப்பட்ட அந்த தங்க நாணயத்தின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.