97 வயதில் இந்த பாட்டி செய்துள்ள சாதனை ! உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் !
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது பாட்டி ஒருவர் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிகார் மாவட்டத்தில் உள்ள புராணவாஸ் கிராமப் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவுகளின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஒரு பாட்டி ஈர்த்துள்ளார்.
பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 97 வயது வித்யா தேவி எனும் அந்த பாட்டி போட்டியிட ஊரே அவரை ஆச்சர்யமாகப் பார்த்தது. அவரோடு சேர்த்து மொத்தம் 11 பேர் அந்த பதவிக்குப் போட்டியிட்டனர். ஆனாலும் அசராத பாட்டி தீவிரமாக தேர்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு முடிவுகளுக்காகக் காத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் வித்யா தேவி அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக 803 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் அவரை விட கம்மியான வாக்குகளே பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் மிக அதிக வயதில் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் நிகழ்த்தியுள்ளார். அவரின் வெற்றியை அந்த ஊர்மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கணவர் அதே ஊர் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தகக்து.