20 மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த 9ம் வகுப்பு காமக்கொடூர மாணவன்!

Photo of author

By Sakthi

20 மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த 9ம் வகுப்பு காமக்கொடூர மாணவன்!

Sakthi

கேரள மாநிலம் கண்ணூரிலிருக்கின்ற தனியார் பள்ளியில் வெளி மாநிலத்திலிருந்து 9ம் வகுப்பில் ஒரு மாணவி புதிதாக சேர்ந்தார். அந்த மாணவியுடன் அதே வகுப்பு மாணவன் நெருங்கி நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.

அந்த மாணவன் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று மாணவியின் பெற்றோரிடம் நற்பெயரையும் வாங்கினான். வெளி மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு வந்திருந்ததால் மாணவி மனதளவில் சற்றே பாதிப்பிலிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை நன்றாக தெரிந்து கொண்ட அந்த மாணவன் மாணவிக்கு போதை பொருளை கொடுத்து அதனை பயன்படுத்தினால் மனதில் உற்சாகம் தோன்றும் என தெரிவித்துள்ளான். அந்த மாணவியும் போதை பொருளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.

நாளடைவில் அந்த மாணவி போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார், நாள்தோறும் போதை பொருள் இல்லாமல் அவரால் தூங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தனக்கு சாதனமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மாணவன் அந்த மாணவியை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய தொடங்கியதாக தெரிகிறது.

இது தொடர்ந்து கொண்டிருக்க, ஒரு நாள் அந்த மாணவியின் செல்போனிலிருந்த காட்சிகளை பார்த்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியிலாழ்ந்தனர். மாணவியை வயநாட்டிலுள்ள போதைப்பொருள் மீட்பு மையத்தில் அனுமதித்தனர். அங்கே 2 வார கால சிகிச்சைக்கு பிறகு அந்த மாணவி உடல் நலம் பெற்றார் என தெரிவிக்கிறார்கள்.

அந்த மாணவி உடல்நலம் பெற்ற பிறகு அந்த மாணவியின் பெற்றோர் கண்ணூர் டவுன் காவல் நிலையத்தில் அந்த மாணவன் மீது புகார் வழங்கினர். விசாரணையில் அந்த மாணவன் இதே போல 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போதை பொருளை வழங்கி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

ஆகவே அந்த மாணவனை காவல்துறையினர் கைது செய்து கோக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மாணவனுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகமிருப்பதால் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.