குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்?
தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நிறைவடைந்து 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85% மதிப்பெண் பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு 25000 ரூபாயும் என அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று முகநூலில் போலியான தகவல் பரவி வருகிறது.
முகநூலில் வெளிவந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம். இவை அனைத்துமே போலியான நபர்களால் கிளப்பிய தகவல் என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இந்த போலி தகவல்களை கூறிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பின்னர் அவர்கள் இதுபோன்ற திட்டம் எதுவும் மத்திய அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிடவில்லை என்றும், மாணவர்கள் ஸ்காலர்ஷிப் தொடர்பான விவரங்களை மத்திய அரசின் https://www.education.gov.in/en/schemes-school என்ற இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இது போன்ற போலியான தகவல்களை மக்கள்யாரும் நம்ப வேண்டாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.