இவங்கதான் முரளியின் மனைவியா? வெளிவந்த அண்சீன் பிக்ஸ்!

Photo of author

By Rupa

இவங்கதான் முரளியின் மனைவியா? வெளிவந்த அண்சீன் பிக்ஸ்!

 

முரளி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர்.இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வந்த புது வசந்தம்1991 இல் வந்த இதயம் படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. கடல் பூக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். ரசிகர்கள் மத்தியில் வித்தியாசமான நடிகராக திகழ்ந்தார். இவர் 2010இல் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா மற்றும் ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். அதர்வா பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளின் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார்.

இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார். இதுவரை முரளி மனைவியை பார்க்காததால்முதல் முறையாக முரளிமற்றும் அவரது மனைவி இருக்கும் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.