இன்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு! சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

0
175
Writing test for police sub-inspector today! Uniform Staff Selection Notice!

இன்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு! சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வானது தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளது. சென்னை, தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் இடம் பெறுவார்கள். விண்ணப்பதாரர்கள்,  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு தகுதியானவர்கள். இதற்கான எழுத்து தேர்வு இன்று (சனிக்கிழமை) காலையும், மாலையும் தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஆங்கில எழுத்து தேர்வும், மதியம் தமிழ் எழுத்து தேர்வு நடைபெறும். காவல்துறையில் வேலை செய்பவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது. இவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனியாக எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

தமிழுக்கான தகுதி தேர்வும் தனியாக நடைபெறுகிறது.2 லட்சத்து 22 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.43 திருநங்கைகள் தேர்வு எழுத அழைக்கப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம், அடையாள அட்டை, பரீட்சை அட்டை மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் மேற்கூறிய பொருட்கள் தவிர வேறு எதுவும் எடுத்து வர அனுமதியில்லை.

செல்போன் மற்றும் கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் எடுத்து வர அனுமதியில்லை. தேர்வு மைய வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. சீருடை பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. சீமாஅகர்வால், ஐ.ஜி.செந்தில்குமாரி, சூப்பிரண்டு தம்பிதுரை ஆகியோர் இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.

Previous article திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட்..தேர்வுத்துறை அறிவிப்பு!
Next articleகடந்த 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்களின் சாராம்சங்கள் என்னென்ன?