BREAKING NEWS ஆன்லைன் ரம்மிக்கு தடையா? பரிந்துரை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு!

Photo of author

By CineDesk

BREAKING NEWS ஆன்லைன் ரம்மிக்கு தடையா? பரிந்துரை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு!

CineDesk

BREAKING NEWS! Is there a ban on online rummy? Nomination Committee Report Submission!

BREAKING NEWS ஆன்லைன் ரம்மிக்கு தடையா? பரிந்துரை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டானது பலரால் ஈர்க்கப்பட்டு விளையாட்டை ஆர்வத்துடன் விளையாட வைக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி விளையாடும் விளையாடகும். இந்த விளையாட்டின் மூலம் பலருக்கு நன்மை உருவாக்கும் மற்றும் சிலருக்கு தீமையும் விளைவிக்கும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாட தொடங்கினாள் நம் அந்த விளையாட்டிற்கு முழுமையாக அடிமையாகி விடுவோம். ஆன்லைன் ரம்மியில் முழுவதுமாக அடிமையாகி அதிக பணத்தை வைத்து விளையாடுகின்றனர். ஆன்லைன் ரம்மியில் வெற்றி பெற்றால் பணத்தைப் பெறலாம் ஆனால் விளையாட்டில் தோற்றால் பணத்தை இழக்க வேண்டியிருக்கும். இந்த விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டாள் அதிலிருந்து மீள்வது கடினம். இதனால் இந்த விளையாட்டில் தோற்றவர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தற்கொலை நிகழ்ந்தாலும் தற்போது ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்பட்ட நிதி இழப்பு மற்றும் தற்கொலை ஆகிய விபத்துகளை விளைவிக்கும் தன்மையை கண்டறிய வேண்டும். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவரின் தரவுகளை ஆராய வேண்டும். மேலும் விளம்பரத்தால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். சென்னையில் ஐகோர்ட்டில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று கூறினார். இந்தக் குழுவில் ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன் , ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடோ ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்த குழு 2 வாரத்துக்குள் தனது சேகரித்த தகவலை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இக்குழுவினர் ஆராய்ந்து சேகரித்த தகவலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர். தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.