காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே!

Photo of author

By Parthipan K

காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே!

Parthipan K

Can you even buy moi like this at the earring festival? Even after paying the money, the message is a good idea!

காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே!

காது குத்துவது என்பது தமிழ் மரபில் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. ஆண்  குழந்தையோ பெண் குழந்தையோ இருவருக்குமே பெற்றோர்கள் காது குத்தி விடுவார்கள். இது ஒரு சம்பிரதாயம். காதணி விழாவின் பொழுது தாய்மாமன் சீர் வருவது வழக்கம். நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் மொய் வைப்பார்கள். இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது.

இப்போது அனைத்தும் டிஜிட்டல் உலகமாக மாறி வருகிறது. அதனை உண்மையாக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டதில் புதிய முறையில் மொய் வாங்கும் நிகழ்வானது நடை பெற்றுள்ளது. அந்த நிகழ்வில் மணிகண்டன் என்பவர் தனது மகளின் காதணி விழாவின் பொழுது மொய்  வாங்குவதை கணினியில் சேமித்து மற்றும்   மொய் வைப்பவர்களின் பெயர் ,ஊர் , தொகையின் விவரம்  அனைத்தும் சேமிக்கப்பட்டது. மேலும் மொய்  விவரங்கள் குறித்து குறுஞ்செய்தியை அவரவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது இதனை கண்ட உறவினர்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்.மகளின் காதணி விழாவில் இப்படி ஒரு நிகழ்வு செய்து அப்பகுதியையே வியப்படைய செய்துள்ளார்..