துப்பாக்கி சூட்டுடன் நடந்த வாக்குப்பதிவு ?

Photo of author

By CineDesk


ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் 63.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

81 சட்டசபை தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது அதன்படி கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 64.12 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் அங்கு இரண்டாம் கட்டமாக 20 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது இரண்டாம் கட்ட தேர்தல் 29 பெண்கள் உட்பட 270 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் இதில் முதல்-மந்திரி ரகுபர் தாஸ் தொகுதியும் உள்ளடங்கும்


தேர்தலுக்காக 6066 அமைக்கப்பட்டு இருந்தன இதில் 262 வாக்குச்சாவடிகள் நக்சலைட்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளிலிருந்து இதனால் வாக்குச்சாவடிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 18 தொகுதிகள் பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்தது ஆனால் முகம்மது முதல்-மந்திரி ரகுவர்தாஸ் போட்டியிடும் மற்றும் ஜாம்ஷெட்பூர்(கிழக்கு மற்றும் மேற்கு ) ஆகிய தொகுதிகளில் மட்டும் மூன்று மணிக்குப் பிறகும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்த தொகுதி 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது அமைதியான முறையில் நடந்த இந்தத் தேர்தலில் 63.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின இதனிடையே சீசாய் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிரடிப்படை போலீசாரின் ஆயுதங்களை சிலர் பறிக்க முயன்றனர் அவர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர் இதில் ஒருவர் பலியானார் மேலும் இருவர் படுகாயமடைந்தனர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் வருகிற 12ஆம் தேதி நடைபெறுகிறது