அமமுக அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதா?
டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக அந்தக் கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் ஐகோர்ட்டும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் அ.ம.மு.க அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி அமமுகவை பதிவு செய்வதற்கான நாங்கள் அனுப்பிய ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துவிட்டு ஆட்சேபனை குறித்து தெரிவிப்பதாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க அறிவுறுத்தியது.
இதில் அதிமுக இன்னொரு கட்சி மற்றும் சிலரும் ஆட்சேபணை தெரிவித்த அம்மா பெயரை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் ஆட்சேபனை தெரிவித்தது.
அதற்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டது இதனை ஏற்று தேர்தல் ஆணையம் அமமுகவை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அறிவித்திருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வமான அதிகாரப்பூர்வ நகல் நாளை திங்கட்கிழமை கையில் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.